குலு மணாலியில் ஷூட்டிங்கை ஆரம்பிக்க ‘புறம்போக்கு’ படக்குழு ஆயத்தம்

Wednesday, January 15, 2014 | 4:00:00 PM



தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘புறம்போக்கு’ ஆகும். நடிகர் ஆர்யா, நடிகர் விஜய் சேதுபதி இவர்களுடன் நடிகர் ஷாமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பைத் துவக்குவதற்காக இந்தக் குழு தற்போது குலு மணாலியில் முகாமிட்டுள்ளது.

அங்கு நடிகர் ஆர்யாவும், நடிகை கார்த்திகாவும் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா ஒரு சமூக ஆர்வலராகவும், நடிகர் விஜய் சேதுபதி ரயில்வேயில் பணிபுரியும் கலாசியாகவும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களின் தோற்றமே படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகின்றது. இது ஒரு ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment